Saturday, September 15, 2012

ஆரிரோ ஆராரிரோ - தெய்வத்திருமகள்

படம்: தெய்வத்திருமகள்
பாடல்: ஆரிரோ ஆராரிரோ
இசை: G.V. பிரகாஷ் குமார்
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: ஹரிச்சரண்
---------

ஆரிரோ ஆராரிரோ..
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..
தாயாக தந்தை மாறும் புது காவியம்..
இவன் வரைந்த கிறுக்களில் இவளோ உயிர் ஓவியம்..
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓருயிர் ஆகுதே..
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆராரிரோ..
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..

முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே..
மழை நின்று போனால் என்ன மரம் துருதே..
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே..
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே..
இது போல் ஆனந்தம் ! வேறில்லையே..
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே..
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆராரிரோ...
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..

கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினால்..
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்...
அடடா! தெய்வம் இங்கே வரம் ஆனதே..
அழகாய் வீட்டில் விளையாடுத்தே..
அன்பின் விதை இங்கே மரமானதே..
கடவுளை பார்த்ததில்லை இவளது
கண்கள் காட்டுதே..
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆராரிரோ..
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..

விழிகளில் ஒரு வானவில் - தெய்வத்திருமகள்

படம்: தெய்வத்திருமகள்
பாடல்: விழிகளில் ஒரு வானவில்
இசை: G.V. பிரகாஷ் குமார்
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: சைந்தவி

------------------

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்.. நான் பார்க்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னாகுமோ இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போல தோன்றினாய்..
என் முன் என்னை காட்டினாய்..
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே..
பூ பூத்ததாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்ணாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மெய்யாநவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ..
என் தேதி பூத்த பூவிது..
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் எனக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த  கனவேங்கே காற்றில் கை வீசினென்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்..
பெண் ஆகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணருகிறேன்..
நில்லென்று சொன்னபோதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...

Thursday, September 13, 2012

வானம் மெல்ல - நீ தானே என் பொன்வசந்தம்

படம்: நீ தானே என் பொன்வசந்தம்.
பாடல்: வானம் மெல்ல
இசை: இளையராஜா.
பாடியவர்கள்: இளையராஜா, பெலா செண்டே 
வரிகள்: நா. முத்துக்குமார்.

------------

ஆண்:
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!

பெண்:
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,

ஆண்:
அன்று பார்த்தது, அந்த பார்வை வேர்ரடி,
இந்த பார்வை வேர்ரடி,

பெண்:
நெஞ்சில் கேட்குதே, உள்ளம் துள்ளி ஓடினேன்,
வந்து போனதாரடி,

ஆண்:
கேட்காமல் கேட்பததேன்ன உன் வார்த்தை,
உன் பார்வை தானே ஓ..
என் பாதி நாளும் தேடும் உன் பாதம்..

பெண்:
என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்,
எங்கேயே இன்பம் துன்பம் நீதானே..!

ஆண்:
உந்தன் மூச்சு காற்றைததான்,
எந்தன் சுவாசம் கேட்குதே,
அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்,
பூட்டி வைத்தது காவல் காப்பேனே..!

பெண்:
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,

ஆண்:
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,

பெண்:
பாதி வயதிலே, தொலைந்த கதைகள் தோன்றுது,
மீண்டும் பேசி இணையுது,

ஆண்:
பாதை மாறியே, பாதம் நான்கு போனது,
மீண்டும் இங்கு சேர்ந்தது,

பெண்:
அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்,
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே,

ஆண்:
நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீதான்,
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே,

பெண்:
கண்கள் உள்ள காரணம்,

ஆண்:
உன்னை பார்க்கதானடி,

பெண்:
வாழம் காலம் யாவும் உன்னை பார்க்க,
இந்த கண்கள் போதாதே..!

ஆண்:
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,

பெண்:
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,

ஆண்:
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!

பெண்:
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,

ஆண்:
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே..!

காற்றை கொஞ்சம் - நீ தானே என் பொன்வசந்தம்

படம்: நீ தானே என் பொன்வசந்தம்.
பாடல் : காற்றை கொஞ்சம்.
இசை: இளையராஜா.
வரிகள்: நா முத்துக்குமார்
பாடியவர்: கார்த்திக்
______

காற்றை கொஞ்சம் நீர்க்க சொன்னேன், பூ பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க,...
காற்றை கொஞ்சம் நீர்க்க சொன்னேன், பூ பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க...
,
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க...
சுற்றும் பூமி நிற்க சொன்னேன், உன்னை தேடி பார்க்க சொன்னேன்
சுற்றும் பூமி நிற்க சொன்னேன், உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன், என் காதல் நலமா என்று...

காற்றை கொஞ்சம் நீர்க்க சொன்னேன், பூ பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க...
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க...

நேரில் பாத்து பேசும் காதல், ஊரில் உண்டு ஏறழ்லாம்,
நெஞ்சின் உள்ளே பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்,
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும்,
ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி,
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவு எந்நாளும்,
தூக்கம் இல்லை என் என்று சொல்லடி...

சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா,
மீதி வைத்த கனவை ஒரு நாள் பேசி தீர்கலாம்,
ஹே ஹே ஹே ஹே..!

காற்றை கொஞ்சம் நீர்க்க சொன்னேன், பூ பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க...
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க...

நேற்று எந்தன் கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே..!
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..!
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்து என் நெஞ்சு,
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி..!

உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு,
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி,
என்னை இன்று மீட்க தான் உன்னை தேடி வந்தேனே,
மீட்ட தோடு மீண்டும் நான் உன்னில் தோலைய்கிறேன் ஹே ஹே..!

காற்றை கொஞ்சம் நீர்க்க சொன்னேன், பூ பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க...
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க...

சுற்றும் பூமி நிற்க சொன்னேன், உன்னை தேடி பார்க்க சொன்னேன்,
சுற்றும் பூமி நிற்க சொன்னேன், உன்னை தேடி பார்க்க சொன்னேன்,
என்னை பற்றி கேட்க சொன்னேன், என் காதல் நலமா என்று...

காற்றை கொஞ்சம் நீர்க்க சொன்னேன், பூ பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க...
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க...

சாய்ந்து சாய்ந்து- நீ தானே என் பொன்வசந்தம்

படம்: நீ தானே என் பொன்வசந்தம் - 2012
பாடல் : சாய்ந்து சாய்ந்து
இசை : இளையராஜா
வரிகள் : நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா
---------

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது,
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே..!
விழியோடு விழி பேச, விறலொடு விரல் பேச,
அடடா வேறு என்ன பேச....

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே ஹே..!

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி,
உன்னை கண்டு கொண்டேன் ஓ..!
என் தந்தை தோழன் ஒன்றான ஆண்-ஐ நான் கண்டு கொண்டேன்,
அழகான உந்தன் மாகோளம் அதை கேட்கும் எந்தன் வாசல்,
காலம் வந்து வந்து கோலமிடும் உன் கண்ணை பார்த்தாலே,
முன் ஜென்மம் போவேனே அங்கே நீயும் நானும் நாம்...

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே ஹே..!

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில்,மெய்யாகும் பொய்யும் ...
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்,
என் வீட்டில் வரும் உன் பாதம் எந்நாளும் இது போதும்,
இன்னும் இன்னும் என்ன தொலைதுராத்தில்,
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே..!
விழியோடு விழி பேச விறலொடு விரல் பேச,
அடடா வேறு என்ன பேச,

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே..!

Wednesday, September 12, 2012

தென்றல் வந்து என்னை தொடும்

படம்: தென்றலே என்னை தொடு.
பாடல்: தென்றல் வந்து என்னை.
இசை: இளையராஜா.
பாடலாசிரியர்: வைரமுத்து.
பாடியவர்கள்: ஜானகி, யேசுதாஸ்.

தென்றல் வந்து என்னை தொடும், பாடல் வரிகள்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு.

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்...

தூரல் போடும் இன் நேரம் தோளில் சாய்ந்தாள் போதும்,
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்,
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு,
நனைந்த பிறகு நாணம் எதற்கு,
மார்பில் சாயும் நேரம்..

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு...

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே,
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே,
மலர்ந்த கொடியோ, மயங்கி கிடக்கும்,
இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும்,
சாரம் ஊரும் நேரம்...

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு.

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்...

song karaoke

Tuesday, September 11, 2012

நீ பார்த்த பார்வைக்கொரு

படம்: ஹே ராம்.
நடிகர்கள்: கமல்,ஷாருக்கான்
இசை: இளையராஜா
குரல்: ஹரிஹரன், அஷா போஷிலே.

பெண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

நான் என்ற சொல் இனி வேண்டாம்,
நீ என்பதே இனி நான் தான்,
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை,
இதுபோல் வேறெங்கும் சொர்ககம் இல்லை,
உயிரா வா...

ஆண்:
நாடகம் முடிந்த பின்னாலும்,
நடிப்பின்னும் தொடர்வது என்ன??
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே,
உயிரா வா...

பெண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

ஆண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

பெண்:
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,

ஆண்:
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,

பெண்:
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

ஆண்:
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

பெண்:
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

ஆண்:
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

ஆண்/பெண்:
உயிரா வா...