Saturday, September 15, 2012

விழிகளில் ஒரு வானவில் - தெய்வத்திருமகள்


படம்: தெய்வத்திருமகள்
பாடல்: விழிகளில் ஒரு வானவில்
இசை: G.V. பிரகாஷ் குமார்
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: சைந்தவி

------------------


விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்.. நான் பார்க்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னாகுமோ இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போல தோன்றினாய்..
என் முன் என்னை காட்டினாய்..
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே..
பூ பூத்ததாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்ணாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மெய்யாநவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ..
என் தேதி பூத்த பூவிது..
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் எனக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த  கனவேங்கே காற்றில் கை வீசினென்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்..
பெண் ஆகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணருகிறேன்..
நில்லென்று சொன்னபோதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...



No comments:

Post a Comment